viral video: மீனவர்களோடு கடலுக்குச் சென்று மீன் பிடித்த நாகை மாவட்ட ஆட்சியர்! - nagapattinam collector johny tom varghese
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 3) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களோடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விசைப்படகில் தனது மனைவியுடன் கடலுக்குச் சென்றார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விசை படகை சுயமாக இயக்கி உள்ளார். அப்போது கடலில் பயணித்தபடியே மீனவர்களோடு உரையாடிக் கொண்டு மீன் பிடிக்கும் அனுபவங்களை நேரடியாக அறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நடுக்கடலில் மீனவர்களின் பாரம்பரிய முறைப்படி சூடம் ஏத்தி சாமி கும்பிட்டார்.
பின், மீன்பிடி வலையை விரித்து கடலில் இறக்கி மீனவர்களோடு சேர்ந்து மீன் பிடித்துள்ளார். அப்போது மீனவர்கள் நடுக்கடலில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸோடு புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
முன்னதாக, கடந்த மே மாதம் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியராக இருந்த ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். மீனவர்களோடு பயணித்து, மீன் பிடிக்கும் அனுபவத்தை பெற்ற மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்யை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.