செய்தியாளர்களை அவமதித்த நாம் தமிழர் கட்சியினர்; சீமானை புறக்கணித்த செய்தியாளர்கள்! - Press conference
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் இன்றும் (ஜூலை 06) நாளையும் (ஜூலை 07) திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 06) காலை தனியார் விடுதியில் 9 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து காலை 9 மணிக்கு செய்தியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் விடுதியில் கூடி இருந்தனர்.
ஆனால், 10 மணிக்கு மேல் ஆகியும் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு வரவில்லை. இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்கள் சந்திப்புக் கூடத்திற்கு வருகை தந்து, அங்கிருந்த செய்தியாளர்களை ஒருமையில் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள், அங்கிருந்து சீமானின் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்து வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.