வீடியோ: கும்பகோணம் மாசிமக பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அன்னதானம் - masi magam in thanjavur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17921347-thumbnail-4x3-l.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாசிமக பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று (மார்ச் 6) தீர்த்தவாரி உற்சவத்தில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், மதங்களை கடந்து, கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் பொதுமக்களுக்கு, மகாமக குளக்கரை அருகே தண்ணீர் பாட்டில்களுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது, பல வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு மதங்களுக்கு அப்பாற்பட்டு, மதநல்லிணக்க சிந்தனை உடன், மகாமக குளம் அருகே உள்ள, காசிவிஸ்வநாதர் வடக்கு வீதியில் கிஸ்வா என அழைக்கப்படும், கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் சாதம் ஆகியவை குடிதண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பலரும் வாங்கி அருந்தி மகிழ்ந்ததுடன் இந்துக்களின் கோயில் திருவிழாவில், இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கியதை பாராட்டி மகிழ்ந்தனர்
இதையும் படிங்க: திருச்செந்தூரில் களைக்கட்டிய மாசித் திருவிழா தேரோட்டம்