அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையர்களை சுழற்றி வீசிய திருமாவளவனின் காளை..!
🎬 Watch Now: Feature Video
மதுரை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. மதுரையில் உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்த நாள் நடைபெறும். அந்த வகையில், முதல் நாளான இன்று (ஜன.15) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
மொத்தம் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு மாலை 4 மணிவரை, ஒரு சுற்றுக்கு 50 முதல் 75 மாடுபிடி வீரர்கள், 8 சுற்றுகளாக நடைபெற உள்ளன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனின் காலை களமிறங்கியது.
வாடி வாசலை துள்ளிப்பாய்ந்த காளையை அடக்க வீரர்கள், காளை மீது பாய்ந்தனர். அவர்களிடம் திமிறி பாய்ந்து, காளையர்களின் பிடியில் இருந்து தப்பி வெற்றி பெற்றது. வெற்று பெற்ற காளைக்கு அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தரப்பில் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கூடியிருந்தனர்.