போளூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. விவசாயிகள் மகிழ்ச்சி! - போளூர் சந்தை
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: போளூரில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கால்நடை சந்தை கூடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று போளூர் சந்தையில் திருவண்ணாமலை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
மார்ச் 22(புதன்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பை(Ugadi festival) முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக காணப்பட்டது. குறிப்பாக ஆந்திர மாநிலம் நெல்லூர், சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகள் வாங்க போளூரில் குவிந்தனர்.
சராசரியாக ஒரு ஆட்டின் விலை 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். போளூர் சந்தையை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத வகையில் வரலாற்று சாதனையாக ஒரே நாளில் நேற்று 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.