ராம்ஜான் வாழ்த்துகள் : ஈகைத் திருநாளில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இறை வழிபாடு!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் : ஈகைத் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பதை இஸ்லாமும் அறிவுறுத்துகிறது. ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் ரம்ஜான் தினத்தை கொண்டாடுகின்றனர்.
அதையொட்டி ஆம்பூர், துத்திப்பட்டு மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்களில் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடினர்.
மேலும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் இஸ்லாமியர்கள் நடத்திய ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றார். தொடர்ந்து தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களை ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.