திண்டுக்கல் நத்தம் அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா! - பாறைப்பட்டி
🎬 Watch Now: Feature Video
Published : Sep 3, 2023, 9:54 PM IST
|Updated : Sep 3, 2023, 10:53 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் சப்பட்டைகுளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் குளம் முழுமையாக நிரம்பியது ஒன்றரை வருடம் காலம் விவசாய பயன்பாட்டிற்குத் தண்ணீர் இருந்து வந்தது நிலையில், தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது.
இதனால் இந்த குளத்தில் உள்ள மீன்களைப் பொதுமக்கள் பிடித்துச் செல்ல ஊரின் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றி உள்ள கிராமங்களுக்கும் தகவல் அளித்தனர். இதை அறிந்த மக்கள் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுற்று வட்டார கிராமப்பகுதிகளிலிருந்தும், மதுரை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுமார் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டிப் போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி ஒற்றுமையாக மீன் பிடித்தனர்.
இதில் இவர்களுக்கு ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்து கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.