மாநில அளவிலான கபடி போட்டி: மேடையில் அமைச்சர் த.மோ.அன்பரசனை கலாய்த்த உதயநிதி! - chennai news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 6, 2023, 1:04 PM IST

சென்னை: தாம்பரம் மாநகர திமுக சார்பில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும், முன்னாள் முதலமைச்ச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான 38 மாவட்ட அணிகள் பங்கேற்கும் மாபெரும் கபடி போட்டி இரும்புலியூரில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது. 

இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து சுமார் 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

அதைத் தொடர்ந்து, இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பல்வேறு நிகழ்வுகளில் கோரிக்கை வைத்திருக்கிறேன் பேனர் வைக்க வேண்டாம் என்று, ஆனால் தொடர்ந்து பேனர் வைத்து அதனைக் கேட்காமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனை இனி செய்ய வேண்டாம். இந்தியாவிலேயே விளையாட்டிற்கு முக்கியத்தும் கொடுக்கும் கட்சி திமுக தான். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பேச்சை நிறைவு செய்தார். 

முன்னதாக மேடையில் பேசிய உதயநிதி, "செஸ் ஒலிம்பியாட்டை நடத்த நான் மறைமுகமாகச் செயல்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். நான் ஒருங்கிணைப்புக் குழுவில் ஒரு நபர், அதனால் எதையும் மறைமுகமாகச் செய்ய வேண்டிய தேவை இல்லை" எனக் கூறி அமைச்சர் தா.மோ.அன்பரசனை கலாய்த்ததால் மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.