‘ஏழை, எளிய மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை’ - அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்! - கட்சி வளர்ச்சிப் பணி
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “ஏழை, எளிய மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை. சுங்கச் சாவடி கட்டணத்தைத் தொடர்ந்து உயர்த்தி, விலைவாசியை ஏற்றி வருவது தான் மத்திய அரசின் தொடர் சாதனை.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை 85 விழுக்காடு வாக்குறுதிகளை தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். சாதி, மத வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்கியவர் தலைவர் கருணாநிதி. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்” என்று தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், ஈபிஎஸ் லஞ்ச ஊழல் பட்டியல் விரைவில் வெளியீடு - அர்ஜுன் சம்பத் கூறியது என்ன?