"இனிமேலாவது ஆளுநர்கள் திருந்தினால் பரவாயில்லை" - அமைச்சர் துரைமுருகன் கடும் தாக்கு! - karunanithi 100th day celebration
🎬 Watch Now: Feature Video
Published : Nov 25, 2023, 2:07 PM IST
வேலூர்: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர அரங்கத்தில் இன்று (நவ.25) புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த கண்காட்சியில் திமுக சார்பில் மக்களுக்கு ஆற்றிய நல்வாழ்வுப் பணிகள் குறித்த புகைப்படங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா மற்றும் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றிய புகைப்படங்கள், முத்தமிழ் அறிஞர் முத்திரை பதிவுகள் கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம், ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போடக்கூடாது என நீதிமன்றம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, “இனிமேலாவது ஆளுநர்கள் திருந்தினால் பரவாயில்லை" என பதில் அளித்தார்.