மிலாடி நபி திருநாள்: கோவையில் அனைத்து மதத்தினருக்கும் இலவச குஸ்கா! - கோவையில் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச் குஸ்கா
🎬 Watch Now: Feature Video
Published : Sep 28, 2023, 5:09 PM IST
கோயம்புத்தூர்: இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகத் திகழும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்தநாள் விழாவை, மிலாடி நபி விழாவாக உலகின் பல்வேறு பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடடி வருகின்றனர். இறைத்தூதர் முகமது நபி, ரபி அல்-அவ்வல் எனப்படும் இஸ்லாமிய மாதத்தின் 12ஆம் தேதி, கி.பி 570ஆம் ஆண்டு பிறந்தார். அந்த தினத்தையே இஸ்லாமியர்கள் மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (செப்.28) மிலாடி நபி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோவையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக, கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி விழாவிற்காக, அனைத்து சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கும் குறைந்த விலையில் பிரியாணி விநியோகம் செய்வதற்காக, 60 பிரமாண்ட அண்டாக்களில், 3,000 கிலோ அரிசி, 3,000 கிலோ ஆட்டிறைச்சியைக் கொண்டு டன் கணக்கில் மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். அதேபோல் உக்கடம் அடுத்த ஜி.எம்.நகர் பகுதியில் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் சார்பில், அனைத்து சமூகத்தைச் சார்ந்த சுமார் 12,000 பேருக்கு இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: மிலாடி நபி திருநாள் : முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!