வீடியோ: வாணியம்பாடி ஸ்ரீ அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா - திருப்பத்தூர்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை இன்று (பிப். 19) நடைப்பெற்றது. முன்னதாக அங்காளம்மன் சிலை மற்றும் பூங்கரக ஊர்வலம் கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க திருவீதி உலா மூலம் பாலாற்றை வந்தடைந்தது.
அதன்பின் பாலாற்றிக்கு பூங்கரகம் வந்தவுடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதையடுத்து அங்கு வடிவமைக்கப்பட்டிருந்த அசூரனின் சிலையின் கண் முட்டைகளை எடுக்க பக்தர்கள், மற்றும் இளைஞர்கள் அலைமோதினர். இந்த விழாவினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு பாதுகாப்பு பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுப்பட்டிருந்தனர்.