சபரிமலை பக்தர்களுக்காக விநோத பிரார்த்தனை.. 300 அடி கிணற்றில் 2 மணி நேரம் யோகாசனம்! - man performed yoga in a well at theni

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 11:51 AM IST

தேனி: சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என 300 அடி ஆழக்கிணற்று நீரில், சுமார் 2 மணி நேர யோகாசனம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்ட நபரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் பகுதியை சேர்ந்தவர், விஜயன். ஆன்மீகவாதியாக அறியப்படும் இவர், தேனி மாவட்டம் சின்னமனூரில் 300 அடி ஆழமுள்ள கிணற்று நீரில், சுமார் 2 மணி நேரம் யோகாசனம் செய்து பிரார்த்தனை செய்துள்ளார். சபரிமலை கோயிலில் தற்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், பக்தர்கள் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எனவே, சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் பழனிமலை முருகன் கோயிலுக்கு விரதம் மேற்கொண்டு மாலை அணிந்து பாதையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, எந்த வித இடையூறும் ஏற்படாமல் தரிசனம் செய்துவிட்டு பாதுகாப்பாக திரும்பி வர வேண்டும் என்பதற்காக கிணற்று நீரில் மிதந்து கொண்டு, சுமார் இரண்டு மணி நேரம் யோகாசனம் செய்து பிரார்த்தனை நடத்தி வருகிறார். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.