Video: காரில் சாய்ந்ததற்காக 6 வயது சிறுவனை எட்டி உதைத்த இளைஞர் கைது - காரில் சாய்ந்ததற்காக
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் நேற்று (நவ-3) இரவு சிஹ்சாத் என்ற இளைஞரின் காரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 6 வயது சிறுவனை, அந்த இளைஞன் காலால் எட்டி உதைத்தார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுவனைக் கண்டு, அருகிலிருந்தவர்கள் சிஹ்சாத்திடம் கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் நடந்து 10 மணி நேரத்திற்குள் கண்ணூர் காவல்துறை சிஹ்சாத் மீது கொலை முயற்சி போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கிடையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST