மெக்கா கடிகார கோபுரத்தில் மின்னல் தாக்கிய வீடியோ வைரல்! - மின்னல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தில் மின்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தபோது, கடிகார கோபுரத்தின் உச்சியில் மின்னல் தாக்குகிறது. அந்த வெள்ளொளி நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது. பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் இந்த வீடியோவை, கிங் அப்துல்அஜிஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வானியல் அறிஞர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்தார். கடந்த 5ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை, 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST