ஒப்பிலியப்பன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்கோயில் பூமிதேவி தாயார் சமேத வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 29) சிறப்பாக நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் ஆகியோரால் மங்களசாசனம் செய்யப்பட்ட இத்தலத்தில் சாமிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் அனைத்திலும் உப்பு இன்றியே படைக்கப்படுகிறது.
இது பூலோக வைகுண்டம், தமிழ்நாடு திருப்பதி, திருவிண்ணகர் என்றும் அழைக்கப்படுகிறது. இவர் திருப்பதி பெருமாளுக்கு மூத்தவராக போற்றப்படுகிறார். எனவே, அவருக்கான பிரார்த்தனைகளை அங்கு சென்று நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு வந்த நிறைவேற்றி, அதற்கான பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி ஞாயிறு இரவு முதல் கால யாக பூஜை தொடங்கி இன்று (ஜூன் 29) காலை 8ஆம் கால யாக பூஜை நிறைவு பெற்ற பின்னர் மகா பூர்ணாஹுதியும் அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. அதன் பிறகு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: கங்கைகொண்ட சோழபுரத்தில் சீன பானை ஓடு கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்