செல்வ வளம் பெருகும் செட்டிகுளம் கோயிலில் குபேர யாக வேள்வி - திரளான பக்தர்கள் பங்கேற்பு! - செட்டிகுளம் கோயிலில் குபேர யாக வேள்வி
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் 12 ராசிகளுக்கு, 12 குபேர பெருமான், 12 தூண்களில் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும், இந்த திருக்கோயிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இதனிடையே ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர யாக வேள்வி நடைபெறும். அதன் படி ஆனி மாத குபேர யாக வேள்வி இன்று (ஜூலை 08) நடைபெற்றது. விநாயகர் வழிபாடு, சங்கல்ப பூஜை மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. யாக வேள்வியில் பல்வேறு பழ வகைகள், மூலிகை மற்றும் திரவியப் பொருள்கள் செலுத்தப்பட்டு மஹாபூர்ணாஹுதி நடைபெற்றது.
மேலும் சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், தேன் மற்றும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கலச தீர்த்தம் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜைகளுக்குப் பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது.
குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்னைகள் தீரும் என்பதால் திரளான தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்.. தென்காசியில் கும்பாபிஷேகம் கோலாகலம்!