கொடைக்கானல் மோயர் சதுக்கத்தில் கடைகளை சூறையாடிய காட்டு யானைகள்! அதிகாரிகள் ஆய்வு!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் காட்டு யானைகளால் சேதப்படுத்திய கடைகளை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர், அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு மோயர் பாய்ண்ட், தூண் பாறை, பைன் ஃபாரஸ்ட், குணா குகை, பேரிஜம் உள்ளிட்ட பல சுற்றுலா தளங்கள் உள்ளன, இதில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று ஐந்து இருக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதிலும் சேதப்படுத்தி உள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இரண்டு நாட்களாக தடை நீடித்து வருகிறது.
தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட கடைகள் மற்றும் சுற்றுலா பகுதியை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை , துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டனர்.