Leo Release: கேரளாவில் 'அடிபோலி' போட்ட லியோ! - லியோ ரிவ்யூ
🎬 Watch Now: Feature Video


Published : Oct 19, 2023, 1:44 PM IST
கேரளா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று (அக்.19) மிகுந்த ஆர்ப்பரிப்புடன் வெளியான திரைப்படம், லியோ (Leo). பல எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் பிறகு உலகெங்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். தற்போது உலகெங்கும் வெளியான லியோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாள் கலெக்ஷன் எகிறியுள்ளது எனலாம். இந்நிலையில், கேரள மாநிலத்தில் வெளியான லியோ திரைப்படம் குறித்து கேரள விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் படம் மிகவும் அருமையாக உள்ளதாகவும், படம் அடிபோலி, எதிர்பார்க்காத பல சுவாரஸ்யங்கள் படத்தில் உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Leo Movie; திருச்சியில் மாஸாக நடனமாடி ரசிகர்கள் கொண்டாட்டம்!