வீடியோ: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவு
🎬 Watch Now: Feature Video
கச்சத்தீவு: இலங்கை - இந்தியா இருநாட்டு மக்களின் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, இந்த ஆண்டு மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில், தமிழ்நாட்டில் இருந்து 2,408 பக்தர்கள் 72 படகுகள் மூலமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்துக்கு சென்றனர்.
கோயிலில் நேற்று (மார்ச் 3) சிறப்பு திருப்பலி மற்றும் சிலுவைப்பாதை தேர் பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 4) காலை நடைபெற்ற சிறப்பு திருப்பல்லியில் ஏராளமான இலங்கை - இந்திய பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து விழா நிறைவுப்பெற்றது.
இந்தியாவில் இருந்து விழாவில் கலந்துக்கொள்வதற்காக கச்சத்தீவு சென்ற பக்தர்கள் அனைவருக்கும் இலங்கை அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது. பின் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை பக்தர்களும் இந்திய பக்தர்களும் கச்சத்தீவில் இருந்து புறப்பட்டனர்.
இலங்கையில் இருந்து இந்தியா புறப்பட்ட பயணிகள் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு இன்று (மார்ச் 4) மதியம் வந்தடைந்தனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள், தமிழக காவல்துறை அதிகாரிகள், கடலோர காவல் குழு அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னர் அவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திற்குள் அனுமதித்தனர்.