சசிகலாவிடம் நேரடி விசாரணை நடத்தாதது ஏன்... நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சரிடம் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த நீதியரசர் ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 500 பக்கம் ஆங்கிலத்திலும், 608 பக்கம் தமிழிலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். சாட்சிகளின் நேரடி வாக்குமூலங்கள் துல்லியமாக உள்ளன. அதில் மர்மம் உள்ளதா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும். அப்படி மர்மம் இருக்கும்பட்சத்தில் அதை வெளியே சொல்வதும், சொல்லாததும் அரங்கத்தின் முடிவு. நான் சசிகலாவை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. விசாரணை தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் எழுத்துப்பூர்வமாக வர விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். அதனால் எழுத்துப்பூர்வமாகவே கேள்விகள் கேட்கப்பட்ட வாக்குமூலம் வாங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST