"நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறுக" - விவசாய சங்கம் கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
தேனி: தமிழ்நாடு அரசு, நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளிக்கப்பட்டது.
விளை நிலங்கள், நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகளை போன்றாவற்றை அபகரிக்க வழி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்ட இருப்பதாக கூறி நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத்தினர், "தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை, கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் திமுக அரசு எந்த வித விவாதம் இன்றி நிறைவேற்றியது.
எதிர்க் கட்சிகளிடமோ அல்லது விவசாயப் பிரதிநிதிகள் இடமோ எந்த வித கருத்தும் கேட்காமல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம். மேலும் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குட்டை, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ளும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதனால் விவசாய நிலங்கள் பாலை வனமாக மாறும் சூழல் இருக்கின்றது. தமிழ் நாட்டின் விவசாயிகளின் பட்டா நிலங்களை அபகரிக்க கூடிய ஆபத்து இந்தச் சட்டத்தில் இருக்கின்றது. இதனால் எங்கள் சங்கங்களின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என இந்த கோரிக்கை மனுவை அளித்து உள்ளோம்.
இந்தச் சட்டத்தைத் திரும்ப பெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி... 5,500 மீது போலீசார் வழக்குப்பதிவு!