ஹெல்மெட் இருக்கா..? பட்டாசு பாக்ஸ் வாங்கிக்கோங்க..! தருமபுரியில் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி..! - தலைக்கவசம் பரிசு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-11-2023/640-480-19966271-thumbnail-16x9-cbe.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Nov 7, 2023, 6:05 PM IST
தருமபுரி: தலைக்கவசம் அணிந்து பயணிக்க பொதுமக்களிடம் போலீசார் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தருமபுரியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பட்டாசு பாக்ஸை பரிசாக வழங்கி போலீசார் ஊக்குவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி போக்குவரத்து போலீசார் மற்றும் “மை தருமபுரி சமுக ஆர்வலர்கள்” இணைந்து நால்ரோடு சந்திப்பு சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் தலைக்கவசம் அணிந்து செல்பவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பாராட்டி போக்குவரத்துத் துறை உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இலவசமாக பட்டாசு பாக்ஸ்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்.
மேலும், தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது எனவும், 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கக்கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். போக்குவரத்து போலீசார் மற்றும் மை தருமபுரி சமூக ஆர்வலர்களின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.