ஐப்பசி மாதம் விசேஷம் : அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.24 கோடி உண்டியல் காணிக்கை வசூல்! - Tiruvannamalai
🎬 Watch Now: Feature Video
Published : Nov 1, 2023, 10:30 AM IST
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலின் ஐப்பசி மாத உண்டியல் வருவாய் 2 கோடியே 24 லட்ச ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு வருடந்தோரும் ஐப்பசி மாதத்தில் பக்தர்கள் பலரும் கோயிலில் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
ஐப்பசி மாத பௌர்ணமி முடிவடைந்த நிலையில், கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றன. அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல், மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தின் அருகில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களிலும் சேர்ந்த காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், உண்டியல் காணிக்கையில், 2 கோடியே 24 லட்சத்து 224 ரூபாய் பணம், 188 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 240 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.