குடியாத்தத்தில் குட்டி IPL - விசேஷமாக நடந்த ஏலம்! - குடியாத்தம் கிரிக்கெட் ப்ரீமியர் லீக்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், குடியாத்தம் கிரிக்கெட் ப்ரீமியர் லீக் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் குடியாத்தம் பகுதியில் 12 அணி கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து கிரிக்கெட் மேட்ச் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் நடைபெற உள்ளது.
இதற்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் விளையாடும் வீரர்களை ஏலத்தில் எடுப்பதைப் போலவே குடியாத்தம் பகுதியில் இயங்கி வரும் 12 கிரிக்கெட் மேட்ச் நடத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், குடியாத்தம் பகுதியில் உள்ள சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களை 'நான் நீ' என போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.
12 மணி நேரம் நடந்த இந்த ஏலத்தில் 315 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் இருந்து சிறப்பாக விளையாடும் 132 விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். இதில் விஜயகாந்த், சிலம்பரசன், கணேஷ் என்பவர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். மீதி உள்ள கிரிக்கெட் வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்சில் ஏலம் எடுப்பதைப் போல் குடியாத்தம் பகுதியில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு வீரர்களை ஏலம் எடுத்ததால் பொதுமக்கள் இந்த நிகழ்வை ஆச்சரியத்துடன் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.