Video: பெட்ரோல் விலை உயர்வால் திருமணத்திற்கு சைக்கிளில் சென்ற 90’s கிட்ஸ் மணமகன்! - ஓடிசா மாநில செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15331920-thumbnail-3x2-d.jpg)
ஒடிசா: புபனேஸ்வரில் உள்ள யூனிட்-III பகுதியைச் சேர்ந்த மணமகன் சுப்ரான்சு சமல் மற்றும் மணமகள் சிப்ரா ஆகியோர் புபனேஸ்வர்-பூரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்னதாக, சுப்ரான்சு சைக்கிளில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர விருப்பம் தெரிவித்திருந்தார். மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக சுப்ரான்சு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
ஓடிசா மாநில செய்திகள்