குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் 'பச்சை ரோஜா' - coonoor
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில், பச்சை ரோஜா பூக்கத் தொடங்கி உள்ளதால், பூங்கா ஊழியர்கள் மட்டுமல்லாது, சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் புதிய ரக மலர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மே மாதம் நடைபெறும் கோடை சீசனுக்காக, சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜாவை விளைவிக்கும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக 50 பதியன் நாற்றுக்கள் உதகையில் இருந்து எடுத்து வரப்பட்டு, குன்னூர் நர்சரியில் உருவாக்கப்பட்டது.
அதில் இருந்துதான் தற்போது பச்சை ரோஜா பூக்கத் தொடங்கி உள்ளது. இந்த பச்சை ரோஜாவானது, மே மாதம் மாதம் நீலகிரியில் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஊட்டி மலர் கண்காட்சி வருகிற மே 19 அன்று தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.