சரக்கு வாகன ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து!
🎬 Watch Now: Feature Video
சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில் நேற்றிரவு டாடா ஏஸ் (Tata Ace) சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி விட்டு, அங்கிருந்த உணவக வாயிலில் மோதி நின்றது. இதில் மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. நான்கு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பின்னர் காயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்த பட்டுசாமி (43) என்பவர் சரக்கு வாகனத்தை இயக்கி வந்ததாகவும், திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடைக்குள் புகுந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர், சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Varichiyur Selvam: கொலை வழக்கில் ரவுடி வரிச்சூர் செல்வம் அதிரடி கைது.. தென் மண்டல ஐஜிக்கு நீதிமன்றம் பாராட்டு!