ETV Bharat / entertainment

"வெற்றிமாறன் எனும் பல்கலைக்கழகத்தில் விடுதலை பட்டப்படிப்பு படித்துள்ளேன்" - நடிகர் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி! - VIDUTHALAI 2 MOVIE TRAILER

வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன் என விடுதலை பாகம் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசினார்.

விடுதலை 2 போஸ்டர், விஜய்சேதுபதி
விடுதலை 2 போஸ்டர், விஜய்சேதுபதி (Credits - RS Infotainment X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 11:07 PM IST

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி விடுதலை பாகம் 2 வரும் டிச 20 தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று(நவ 26) விடுதலை 2 ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, கென் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், "ராஜா இருக்கும் காலத்தில் அவர் இசையை ரசிப்பதே பெரும் வரமாக நினைக்கின்றேன். அவரோடு கேள்வி கேட்பது, அவரோடு பழகுவது, அவரோடு பேசுவது, அவர் படத்தில் வேலை பார்த்தது, இப்படி பல வரங்களை வாங்கி வந்த பெரும் பாக்கியவானாக கருதுகிறேன்.

முதன் முதலில் தன் காதலியின் முகத்தை எதிரில் அமர்ந்து பார்ப்பது போல் இளையராஜா பேசும் பொழுது அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இசை மட்டுமல்லாமல் அவர் பேச்சிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.

விடுதலை 2 பற்றி பேச வேண்டும் என்றால் வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக் கூடிய படம். வெற்றிமாறன் விடுதலை படத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம் என்பது தான் எதார்த்தம். வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு இயக்குநர் என்ன எழுதுகிறாரோ அதை முடிந்த அளவு புரிந்து நடிக்க முயற்சி செய்வேன். ஆனால், வெற்றிமாறன் எழுதிய வசனங்களை வீட்டிற்கு சென்று அதை நான்கு பேருடன் விவாதம் செய்துகொள்ளும் அளவிற்கு எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. விடுதலை திரைப்படத்தை பொறுத்தவரை வெற்றிமாறன் தான் வாத்தியார். அவருடன் இருந்து கற்றுக் கொண்ட மாணவனாக என்னை நான் நினைக்கிறேன் என மேடையில் விஜய்சேதுபதி பேசினார்.

இதையும் படிங்க : விடுதலை 2வில் வாத்தியார் யார்? - ட்விஸ்ட்டை உடைத்த வெற்றிமாறன்!

மேடையில் இசையமைப்பாளர் இளையராஜா மேடையில் பேசுகையில், "சூரி, உங்களை கதாநாயகனாக மாற்றியது வெற்றிமாறன் தான். தற்பொழுது எத்தனை திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறீர்கள் என கேட்டு, நீங்கள் காமெடி கதாபாத்திரத்தில் தானே நடித்து வந்தீர்கள். இப்பொழுது கதாநாயகனாக நடிப்பது காமெடியா அல்லது கதாநாயகனா என கிண்டல் செய்தார்.

அதனை தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய இளையராஜா, உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். நான் தான் முதலில் படத்தை பார்ப்பேன் எனக்கு பிறகு தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள். படத்திற்கு நான்தான் முதல் ரசிகன் எனக்கு தானே படத்தை முதலில் காண்பிக்கிறீர்கள் என்றார்.

முதல் பாகத்தை பார்த்து இதே போல தான் திரைப்படம் இருக்கும் என நினைக்காதீர்கள். விடுதலை இரண்டாம் பாகம் வேறு ஒரு பாதையை நோக்கிச் செல்கிறது. இந்த திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். காரணம் அவ்வளவு உழைப்பு இருக்கிறது.

நான் ஒரு திரைப்படத்திற்கு எப்படி பாடல்கள் இசையமைப்பேன் என்றால் இயக்குநர்கள் Situation சொல்லும் பொழுது மனதில் ஒன்றும் இருக்காது blank ஆகிவிடும். ஆனால் அதுவே ஆரம்பித்து விட்டது என்றால் வந்து கொண்டே இருக்கும்.

இப்படியாக ஒரு படத்திற்கு ஆகாயத்தில் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் படத்தின் இசையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருக்கும். ஆனால், நான் பணியாற்றிய தெலுங்கு படம் ஒன்றில் அவர்களே அனைத்தையும் எழுதிக் கொண்டு வந்து விட்டனர். பிறகு அவர்கள் எழுதி வைத்ததில் இருந்து பாடல்களை அமைத்தேன். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். என்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படங்கள் அமைப்பது வேறு, அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு இசையமைப்பது வேறு" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.