உதகையில் உறைபனி சீசன் தொடங்கியது.. கடும் குளிரால் மக்கள் அவதி! - frost in ooty
🎬 Watch Now: Feature Video
Published : Dec 25, 2023, 3:20 PM IST
நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் காலநிலை மாற்றத்தால் நேற்று (டிச.24) காலை முதல் உறைபனி பொழிவு அதிகரித்து கடும் பனி மூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்பட்டது. இதனால், கடும் குளிர் காரணமாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (டிச.25) உறைபனியின் தாக்கம் அதிகரித்து ஒரு டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலை பதிவாகும் என எதிர் பார்க்கப்பட்டது. அதைப் போல, இன்று காலை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உதகை கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை, சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், பிங்கர் போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.
மேலும், கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் பனி பொழிவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.