’நண்பனை பார்த்த தேதி மட்டும் ஒட்டிக்கொண்டது என் ஞாபகத்தில்’ - பூனை கிளியின் நட்பு - pattu

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 14, 2023, 9:25 PM IST

கோயம்புத்தூர்:  தமிழ்நாடு வனத்துறை வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் பச்சைக்கிளிகளை பிடித்து வளர்க்க சமீபத்தில் தடை விதித்துள்ளது. இதனையடுத்து ஆனைமலைப் புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து காலில் அடிபட்டு, பறக்க முடியாமல் அருகிலிருந்த மின்சார ஊழியர் வீட்டில் தஞ்சமடைந்தது, ஒரு பச்சைக்கிளி. அதனைப் பார்த்து மனமிறங்கிப் போன மின்சார ஊழியர் அந்த பச்சைக் கிளிக்கு சிகிச்சை அளித்துள்ளார். 

பின்னர் அதனை பிரிய மனமில்லாத அந்த ஊழியர் அந்த பச்சைக்கிளியை, தன் வீட்டிலேயே வளர்த்து வந்தார். அந்த பச்சைக்கிளிக்கு ’பட்டு’ எனப்பெயர் வைத்து, வீட்டில் ஒரு ஆள் போல் பாதுகாத்து வளர்த்து வந்தார். கிளி மட்டுமின்றி, இவரின் வீட்டில் பூனையையும் வளர்த்து வருகிறார். இவரின் பூனைக்கு ’புஜ்ஜி’ எனப் பெயர் சூட்டி பாசமாக வளர்த்து வந்துள்ளார். 

பொதுவாக பூனைக்கும் கிளிக்கும் ஒத்துவராது என்ற கூற்றைப் பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், இங்கு இந்த மின்சார ஊழியரின் வீட்டில் இந்த கூற்று பொய்யானது. பாதிக்கப்பட்ட கிளி, பூனையுடன் குறுகிய நாளில் ஒன்றாகப் பழகி வந்தது வளர்ப்பு எஜமானிக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புஜ்ஜிக்கு வைக்கும் உணவை பட்டு மிரட்டி பறிப்பது, பின் புஜ்ஜியும் பட்டும் ஒன்றாக விளையாடின வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். காயம் குணமடைந்த பட்டு என்கிற பச்சைக்கிளியை அந்த மின்சார ஊழியர் வனப்பகுதியில் விட்டு வந்துள்ளார். இதனால், புஜ்ஜி தன் நண்பனை விட்டுப் பிரிந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. 

தன் நண்பன் பட்டுவைப் பிரிந்து வாடும் புஜ்ஜியின் சோக வீடியோவையும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த மிஷ்ஷிங் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், புஜ்ஜியின் சோகத்திற்கு ஆதரவாகப் பலர் ஆறுதலும் பலர் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் 'சிங்காரச்சென்னை அட்டை' அறிமுகம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.