கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகள்.. களமிறங்கிய 4 கும்கி யானைகள்! - யானை
🎬 Watch Now: Feature Video
Published : Oct 13, 2023, 7:48 AM IST
நீலகிரி: கூடலூர் அருகே உள்ள பந்தலூர் இன்கோ நகர், இரும்பு பாலம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள வாழை, பாக்கு, தென்னை மரங்கள் மற்றும் கார்களை சேதப்படுத்தி உள்ளது. இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் தலைமையில் 2 ஆண் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் பொருட்டு, தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த காட்டு யானைகளை விரட்ட வசிம், விஜய், பொம்மன், சீனிவாசன் ஆகிய 4 கும்கி யானைகள் முதுமலை யானைகள் முகாமில் இருந்து பந்தலூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு ஆண் காட்டு யானைகளை ஊருக்குள் வராமல் தற்போது வரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த 2 ஆண் யானைகளின் நடமாட்டத்தினையும் டிரோன் மூலம் குருசுமலை பகுதியில் கண்காணிக்கப்பட்டு, 4 கும்கி யானைகள் உதவியுடன் வனக்குழுவினரால் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கட்டையன் யானையை பிடிக்க கபில்தேவ் வருகை.. முத்து கும்கி வந்ததும் ஆபரேஷன் ஸ்டார்ட்!