கொடைக்கானில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்..!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக 'பொங்கல் பண்டிகை' (Pongal Festival) தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் கொடைக்கானலில் உள்ள வில்பட்டி பகுதியில் 'சமத்துவ பொங்கல் விழா' (ஜன.13) நடைபெற்றது. இந்த விழாவில், வில்பட்டி கிராம மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என பொங்கல் வைத்து உற்சாகமாகவும், கோலாகலமாகவும் சமத்துவப் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் தப்பாட்டம், பொய்க்கால் ஆட்டம் , சிலம்பாட்டம், வால் வீச்சு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக கோலப்போட்டி மற்றும் உறியடித்தல் உள்ளிட்டவையும் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும், இந்த பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்ட வெளிநாட்டு மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியும், தமிழ் பாடல்களுக்கு ஏற்ற உற்சாகமாக நடனமாடியும் மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.