மாட்டு வண்டி மீது கார் மோதும் பதற வைக்கும் காட்சிகள்; தென்காசியில் நிகழ்ந்த சோகம் - accident
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தென்காசி ராஜபாளையம் செல்லும் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தென்காசி ராஜபாளையம் செல்லும் சாலையில் கார் ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பாலம் ஒன்றில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னே சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியை கவனிக்காமல் திடீரென காரின் முன் பக்க பகுதி மாட்டு வண்டியில் வேகமாக மோதியது. இதில் மாட்டு வண்டி மாடுகள் மற்றும் கார் ஆகியவை தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்
பின்னே வந்த காரின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கார் மற்றும் மாட்டு வண்டியில் இருந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் பூனைக் குட்டிக்கு நாய் பாலூட்டிய காணொலி!