தீ விபத்தில் தப்ப 3-வது மாடியில் இருந்து குதித்த பெண்.. படுகாயங்களுடன் மீட்பு.. - பீகார்
🎬 Watch Now: Feature Video
நவாடா: பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில், 4 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்ப, 3-வது மாடியில் இருந்து பெண் குதித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உயர் மின்னழுத்த கோளாறால் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீவிபத்தில் இருந்து உயிரை தற்காத்துக் கொள்ள மூன்றாவது மாடியில் இருந்து பெண் குதித்துள்ளார். சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டடத்தில் பரவிய தீ அணைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST