அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து! - தீயணைப்பு வீரர்கள்
🎬 Watch Now: Feature Video
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்கலபுரத்தில் செயல்பட்டு வரும் மைதா, கோதுமை மாவு தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது 5 மாடிகள் வரை கொண்ட இந்த கட்டடம் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சாலை ஆகும்.
இந்த தொழிற்சாலை கிட்டத்தட்ட 10 வருடங்களாக மூடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தற்போது இங்கு இரும்பு பொருட்களை கேஸ் கட்டிங் கொண்டு வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) மாலை பணி முடிந்து வெல்டிங் ஊழியர்கள் வெளியே சென்ற பின்னர், 3 சமையல் எரிவாயு மற்றும் 6 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பயன்படுத்திவிட்டு முறையாக அடைக்காமல் லீக் ஆகும் நிலை விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதனால், தொழிற்சாலை உள்ளே இருந்த சிலிண்டர்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை புறநகர் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.