'அண்ணாமலைக்கு அரோகரா' - காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்! - petrol bulk
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமம் கூட்டிச்சாலை அருகே அண்ணாமலை ஏஜென்சி என்ற இந்துஸ்தான் பெட்ரோலியம் பங்க் இயங்கி வருகிறது.
இந்த பெட்ரோல் பங்கில் மேலாளராக வரதராஜன் என்பவரும் ஊழியராக ராஜசேகர் என்பவரும் இரவு நேரத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது திண்டிவனம் வழியாக ஆந்திர மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்து டீசல் நிரப்பி கொண்டு இருந்தது.
அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜசேகர் என்பவர் டீசலை நிரப்பிக் கொண்டு இருந்தார். பின்னர், முடிந்த பிறகு பணம் கேட்டபோது பேடிஎம்மில்(pay tm)பணம் செலுத்துவதாகக் கூறியுள்ளனர். அப்போது திடீரென காரில் இருந்தவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
பின்னர், ஊழியர் பின் தொடர்ந்து விரட்டிச்சென்றும் காரை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெட்ரோல் பங்க் மேலாளர் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அவர் அளித்தப் புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவான காரின் நம்பரை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.