சிதலமடைந்த தடுப்பணை: சொந்த செலவில் சீரமைக்கும் விவசாயிகள்..! - All state news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 7:43 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி அடுத்த நரிமுடக்கு பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில், அந்த தடுப்பணை கடந்த சில ஆண்டுகளாகப் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் சிதலமடைந்த நிலையில் காணப்பட்டுவந்தது.
இதனால், தடுப்பணையில் நீர்த் தேக்க முடியாத அவல நிலையும், விவசாயத்திற்கு போதுமான நீரும் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர். இந்நிலையில், தடுப்பணையைச் சீரமைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறை புகார் அளித்தும் தடுப்பணையைச் சரிசெய்ய பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, நிதி திரட்டி சிதலமடைந்த தடுப்பணையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறும் போது, இதேபோன்று பல இடங்களில் தடுப்பணைகள் பராமரிக்கப்படாமல், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், அரசு அவற்றைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பணைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.