கோவையில் 90's கிட்ஸ் மிட்டாய் மற்றும் விளையாட்டுப் பொருட்களுடன் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை கோட்டை மேடு பகுதியில் உள்ள மன்ப உல் உலூம் தொடக்கப் பள்ளியில் கடந்த 1989 முதல் 2000 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கோயம்புத்தூர் கரும்புக்கடை பூங்கா நகர்ப் பகுதியில் நேற்றைய முன்தினம் (டிச.10) நடைபெற்றது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒரே இடத்தில் சந்தித்துக் கட்டித் தழுவியது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த நிகழ்ச்சியில் வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தி, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, அப்போதைய பள்ளி காலத்தில் மாணவர்கள் பெரிதும் உண்டு மகிழ்ந்த பொரி உருண்டை, சீடை, நெல்லிக்காய், கமர்கட்டு, தேன் மிட்டாய், கடலை பர்பி, ஜவ்வரிசி வத்தல், ஆரஞ்சு மிட்டாய், சர்க்கரை மிட்டாய், தேன் மிட்டாய், கலர் அப்பளம் என பல வகை உணவு பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர்.
இதுமட்டுமல்லாமல் பம்பரம், கிப்ட் பிரைஸ் உள்ளிட்டவற்றையும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பாடல்கள் பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். அதன் பின்னர், அனைவரும் இணைந்து குழு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் பிரியா விடை கொடுத்தனர்.