மைக்ரோ பைனான்ஸ் கொடுமைகள்! இரவில் வசூல் வேட்டை நடத்திய ஊழியர்கள்! - திண்டுக்கல்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 5, 2023, 12:31 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் எக்விடாஸ் என்ற தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக வேடசந்தூர் தாலுகா நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடனுதவி பெற்றுள்ளார்கள். கடன் தொகையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடன் பெற்ற பெண்களிடம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டி என்ற ஊழியர் சுமார் 7.30 மணி அளவில் அக்கிராமத்திற்கு சென்று பெண்களிடம் கடன் தொகையை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்கள் கடன் தொகை செலுத்துவதற்கு தங்களால் முடியவில்லை சிறிது நாள் கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களிடமிருந்து வசூலிக்காமல் செல்ல முடியாது என்று பிடிவாதமாக நின்ற கருத்தபாண்டி வசூல் மேலாளரான முத்துச்சாமியை அழைத்துள்ளார். முத்துச்சாமி அவருடன் மூன்று ஊழியர்களை அழைத்து வந்து அந்த கிராமத்தில் கடன் பெற்ற பெண்களிடம் ஆபாச வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பெண்களை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதை அறிந்த ஊர் பொதுமக்கள் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை சுற்றி வளைத்ததில் முத்துசாமி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடன் வசூல் செய்ய வரும் அதிகாரிகள் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு பெண்களிடம் வந்து வசூல் செய்ய வரலாமா என்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வேடசந்தூர் போலீசாரை வரவழைத்து ஊழியர்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் சென்று அத்துமீறலாக ஆபாச வார்த்தையில் பேசியயாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.