தீப்பிடித்து எரிந்த பேட்டரி வாகனம் : புகை மண்டலமான மார்கெட்; - electric bike

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2023, 7:40 PM IST

சென்னை: சமீபத்தில் பேட்டரி வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து விடுகின்றன. இதனால் பேட்டரி வாகனங்கள் விற்பனை கணிசமாக குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் உயிர் சேதங்கள் ஏற்படம் வாய்ப்புகளும் அதிகம். இப்படியான சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது ஆட்கள் மிகுந்த பகுதியான ஆவடி மார்கெட்டில் பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணத்தினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வறுகின்றனர். ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர் பேட்டரி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பேட்டரி வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். அதனை ஓராண்டாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் பணி நிமித்தமாக ஆவடி மார்க்கெட் வந்த போது இவரது பேட்டரி இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்தது. 

வாகனத்தை சுரேஷ் ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென புகை வருவதைக் கண்டு சுதாரித்துக் கொண்டு உடனடியாக வாகனத்தை ஓரம்கட்டி நிறுத்தியுள்ளார். கண நேரத்தில் சற்றும் எதிர் பாராத விதமாக வாகனம் மளமளவென எரியத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைக்க சுரேஷ் முயற்சித்தார். 

இதற்கிடையில் இதுகுறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் பேட்டரி வாகனத்தின் தீயை கட்டுப்படுத்தினர். பொதுமக்கள் நிறைந்திருந்த மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இதையும் படிங்க: பகலில் சமோசா விற்பனை... இரவில் பைக் திருட்டு... கூட்டாளியுடன் சிக்கிய சிறுவன்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.