கடலூரில் ஜொலித்த வெள்ளி கடற்கரை: புத்தாண்டை முன்னிட்டு குவித்த மக்கள் கழுகு பார்வையில்.. - new year celebration
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 8:32 PM IST
கடலூர்: உலகில் உள்ள அனைவரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆடல், பாடல், வழிபாடு என மக்களின் கூட்டம் நிறையாத இடம் இல்லை. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கடற்கரை என்றால் அது கடலூரின் வெள்ளி கடற்கரை தான். புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் வெள்ளி கடற்கரையில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கடற்கரையில் விளையாடி குதுகலமாகச் சிறப்பித்து மகிழ்ந்தனர்.
அதிகளவில் கூட்டம் நிறைந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, புத்தாண்டைச் சிறப்பிக்கக் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர்.
மேலும், கடலில் சீற்றம் அதிகம் இருப்பதாலும், அதிக ஆழமுள்ள பகுதியாக தேவனாம்பட்டினம் கடல் உள்ளதாலும் அப்பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். கடற்கரை ஓரத்தில் பாதுகாப்புப் பணியில் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.