"கரககாட்டத்தில் தலைவிரித்தாடும் ஆபாசம்" மேடை நாடக கலைஞர்கள் வேதனை! - ajith raja

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 22, 2023, 10:34 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர் சங்கத்தினர் கோவையில் உள்ள தனியார் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது சங்க மாநில தலைவர் அஜித் ராஜா பேசுகையில், "கோவில்களில் ஆபாச நடனம் ஆடக் கூடாது” என எங்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோவில்களில் ஆபாச நிகழ்ச்சி நடத்தினால் ஏற்பாடு செய்தவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நீதியரசர்களுக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும் வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே எங்கள் தொழில் இருக்கும்.அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தான் அடுத்த ஆறு மாதம் வாழ்வாதாரம் இருக்கும் எனவும்,தேர்தல் வரும்போது மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் நாங்கள் தெரிகிறோம். தேர்தல் வரும் போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்ட தலைவர்கள் போல் வேடமணிய நாங்கள் தென்படுகிறோம்.

அரசு சார்பில் தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை மற்றும் எந்தவித நலவாரியமும் அமைக்கப்படவில்லை.கரகாட்டத்தில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது ஆனால் அதற்கு அங்கீகாரம் உள்ளது. தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை.தற்போது வரை நிரந்தரம் இல்லாத வாழ்க்கையைத் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என வருத்தமாகத் தெரிவித்தார்.மேலும் அழிவு நிலையிலிருந்த தங்களின் நிலைமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தற்போது வழங்கியுள்ள தீர்ப்பால் இனி உயரும் என நம்புகிறோம் என்றார்.

இதையும் படிங்க:பிரபல தயாரிப்பு நிறுவன பெயரில் நூதன மோசடி - நிறுவனத்தின் இணை இயக்குநர் புகார்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.