முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு... தூத்துக்குடியில் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கு விற்பனை!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 3, 2023, 1:00 PM IST
தூத்துக்குடி: முகூர்த்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ இன்று (செப். 3) 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று (செப் 3) சுபமுகூர்த்த தினம் என்பதால் தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பேரூரணி, அணியாபரநல்லூர், செட்டிமலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இருப்பினும், பூக்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று உயரும்.
இன்று (செப் 3) முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிச்சிப் பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மேலும் கல்யாண மாலை கட்ட பயன்படுத்தப்படும் ரோஜா பூ, கட்டு 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது தொடர்ந்து முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.