தருமபுரியில் சூடுபிடிக்கும் கழுதைப்பால் விற்பனை..!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 18, 2024, 5:47 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தருமபுரி நகரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த 4 விவசாயிகள் 40க்கும் மேற்பட்ட கழுதைகளுடன் ஒவ்வொரு பகுதியாக சென்று கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர்.
தாய் கழுதை மற்றும் கழுதை குட்டிகளுடன் சென்று பொதுமக்கள் கேட்கும் இடத்திலேயே கழுதையில் இருந்து பாலை கறந்து விற்பனை செய்து வருகின்றனர். சுமார் நான்கு மில்லி லிட்டர் அளவுள்ள பாலாடை 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். குழந்தைகள் கழுதை பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி தொந்தரவு, மஞ்சள் காமாலை, போன்றவற்றில் இருந்து எளிதில் விடுபடலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய கழுதை பால் விற்பனை செய்யும் சந்திரகாசன், "நாங்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், விவசாயத்தை பூர்வீக தொழிலாக செய்து வருகிறோம். தை மாதத்தில் இதுபோன்று ஒவ்வொரு ஊராக சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகிறோம். கழுதை பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்றார்.