கொடைக்கானலில் 22வது நாய்கள் கண்காட்சி - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு!! - திண்டுக்கல் மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இந்த ஆண்டு கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக நாய்கள் கண்காட்சி இன்று கால்நடைத்துறை சார்பில் நடைபெற்றது. வெளிநாட்டு வகைகளை சேர்ந்த நாய்கள் இந்த நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றன. மொத்தம் 17 வகைகளான நாய்கள் பங்கேற்றது.
குறிப்பாக பிட்புல், ஸ்பானிஷ் மௌடைன், சைபீரியன் ஹஸ்கி, ஜெர்மன் ஷெப்பர்ட், சீட் சூ உள்ளிட்ட நாய்கள் பங்கேற்றது. நான்கு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் நாய்களின் அழகு, நாய்களின் ஒழுக்கம், கீழ் படிதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளை வைத்து நாய்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கால்நடைத்துறை சார்பாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல்வேறு இடங்களில் இருந்து குவிந்துள்ள நாய்களை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் ஏராளமானோர் பிரையண்ட் பூங்காவில் குவிந்தனர்.
இதையும் படிங்க: குடியிருப்போர் நலச்சங்க சந்தா செலுத்தாத பெண் பேராசிரியைக்கு அடி; காவலாளி தாக்கும் வீடியோ வைரல்