21 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக நடைபெற்ற பொன்னர்சங்கர் புரவி எடுப்பு திருவிழா.. - திண்டுக்கல் மாவட்டம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: செந்துறை அருகே 21 ஆண்டுகளுக்கு பின் பொன்னர்சங்கர் புரவி எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டைப்பட்டியில் ஸ்ரீபொன்னர்சங்கர், ஸ்ரீவீர மகாமுனிசுவாமிகளின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு திருவிழா நடத்துவதாக ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்ரீ பொன்னர்சங்கர் ஸ்ரீவீர மகாமுனிசுவாமிகள் புரவி எடுப்பு திருவிழா நேற்று (ஜூலை 31) நடந்தது. முன்னதாக கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி ஊர்மந்தை முத்தாலம்மன் கோயிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.
பின்னர் பொன்னர்சங்கர், வீர மகாமுனிசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. கன்னிமார், கருப்பசாமி மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.