Dindigul-ல் இப்படி ஒரு திருவிழா - மாடு மாலை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி; மாஸாக நடனமாடிய மக்கள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்(Dindigul) மாவட்டம், கொடைரோடு அருகே தொப்பிநாயக்கன்பட்டி மற்றும் ஜல்லிப்பட்டி கிராமங்களில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் கடைசி நிகழ்வான முத்தாலம்மனை வழிபட்டு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்றபின், ஜல்லிப்பட்டி கிராம மக்களின் நூற்றாண்டு பழமைவாய்ந்த மாடு மாலை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் கிராம மக்களின் வழக்கப்படி மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து முத்தாலம்னை வழிபட்டு பின்னர் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இந்நிகழ்சிக்குப் பல்வேறு பகுதியில் இருந்தும் கொண்டுவரப்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கிராமத்து இளைஞர்கள் ஆடிய தேவராட்டத்துடன் உற்சாகமாகத் திருவிழா நிறைவு பெற்றது.
கொடைரோடு அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த மாடு மாலை தண்டும் பாரம்பரிய நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஏராளமானோர் திருவிழாவில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க :விநாயகர் சிலை வைக்க மாநகராட்சிக்கு விநாயகரே நேரில் மனு!