பழங்கள்ல...இத்தனை வகையா...!! மலர்க் கண்காட்சியைத் தொடர்ந்து பழக் கண்காட்சியில் அதிரவைக்கும் ஊட்டி
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி உள்ள நிலையில் இதன் ஒரு பகுதியாக உதகை தாவரவியல் பூங்காவில் 125 வது மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல வண்ண மலர்களைக் கொண்டு மயில், பாண்டா, கரடி, வரையாடு, பட்டாம்பூச்சி போன்ற உருவமைப்பை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த மலர் கண்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருகை புரிந்தனர். மலர் கண்காட்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இது ஒரு புறம் இருக்க இந்தக் கண்காட்சியின் கூடுதல் சிறப்பாக பழக் கண்காட்சி நடைபெற்றது.
தோட்டக்கலை துறையின் சார்பில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் வாழை பழங்கள், மாம்பழங்கள், பலா, மற்றும் நீலகிரியின் ஸ்பெஷல் பழங்களான பேரி, பிளம்ஸ், பீச், பட்டர் ஃப்ரூட் , மங்குஸ்தான், துரியன் உள்ளிட்ட ஏராளமான பழங்கள் அந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இதுமட்டுமின்றி பப்ளிமாஸ், நாவல் , சீதா பழம், போன்ற 50ற்கும் மேற்பட்ட வகைகள் குறிப்பாக நீலகிரியில் விளையக்கூடிய அரிய வகை பழங்களும் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த பழ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பழங்களும் காண்போரை வெகுவாக ஈர்த்தது.
மேலும் இந்த கண்காட்சி பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண்பார்வையில் படாதவாறு, பூங்காவின் பின்புற அரங்கில் அமைக்கப்பட்டது. அதனால் அதிகளவில் பயனில்லாமல் போனது. எனவே வரும் ஆண்டுகளில் பூங்காவில் அரங்குகள் அமைத்து இதுபோல பழ கண்காட்சிகளை காட்சிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Ooty Flower Exhibition: உதகை 125வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது!