IPL 2023: சென்னை வந்த தல தோனிக்கு உற்சாக வரவேற்பு! - மகேந்திர சிங் தோனி
🎬 Watch Now: Feature Video
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 26 பேர் பல்வேறு விமானங்களில் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டெல்லியில் இருந்து நேற்று (மார்ச்.2) பயணிகள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் தோனிக்கு ரசிகர்கள் மலர்தூவி வரவேற்பு உற்சாக அளித்தனர். விமான நிலையத்திலிருந்து தனியார் ஓட்டலுக்கு செல்லும் மகேந்திர சிங் தோனி வரும் நாட்களில் சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.